கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியாதான் முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் (97.31 சதவீதம்), உலகின் மிகச்சிறந்த மீட்பு விகிதங்களில் ஒன்றாகும்.

இதுவரையில் உலகமெங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 8 இலட்சத்து 80 ஆயிரத்து 296 ஆகும். இந்தியா, 1 கோடியே 6 இலட்சத்து 11 ஆயிரத்து 731 பேரை கொரோனாவில் இருந்து மீட்டு, முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் இதுவரை 82 இலட்சத்து 63 ஆயிரத்து 858 பேருக்கு, 1 இலட்சத்து 72 ஆயிரத்து 852 அமர்வுகள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களில் 68.55 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.