ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவர் - ஹக்கீம்

Published By: Digital Desk 3

15 Feb, 2021 | 09:50 AM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம்  பெரும் தவறிழைத்துள்ளமையை உணர்ந்து கொண்டுள்ளதால் , மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளதாக கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ரவுப் ஹக்கீம்  இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட கூட்டத்திற்கு 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கம் கோருவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அவ்விடயம் தொடர்பாக விளக்கமளித்தார்கள். அவர்களது பிரதேசங்களிலும் அத்தோடு அவர்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பாகவும் சில வேலைத்திட்டங்களை அரசாங்கத்தினூடாக செய்து கொள்வதற்கு தேவைப்பாடுகள் காணப்படுவதால் அந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறினார்கள்.

கடந்த காலத்திலும் இவ்வாறு மாறி மாறி வாக்களிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே நாங்கள் செய்தது தவறல்ல என்ற வகையில் பதிலளித்திருந்தார்கள். எவ்வாறிருப்பினும் தற்போது நாட்டிலுள்ள சகல முஸ்லிம் மக்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் , கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான தீர்வையும் முன்னிருத்தியே அதற்கு ஆதரவளித்தாகவும் கூறினர். ஆனால் தற்போது அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர். எனவே அன்று 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தமைக்காக கட்சியின் உயர் பீடத்திடமும் மக்களிடமும் மன்னிப்பு கோர விரும்புவதாகக் கூறினர்.

எனவே, தொடர்ந்தும் இவ்வாறு அவர்கள் செயற்படாமலிருப்பதற்கான சுய விளக்கத்தை மக்கள் மத்தியில் அவர்கள் தெரிவிப்பார்கள். இவர்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவதானித்த பின்னரே ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50