(க.கமலநாதன்)

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வழைப்பினை அவரும்  ஏற்றுக்கொண்டுள்ளார் என தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதியுடன் 70 ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. அதனை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு நிகழ்வுக்கு வருகைத்தருவதாக தெரிவித்துள்ளார் என  அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.