நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்த பல்கலைக்கழக மானிய ஆணையகம் நடடிவடிக்கை எடுத்துள்ளது.

அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இந்த திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதேவேளை கண்டி, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் எட்டு மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சைக்கு அமர திட்டமிடப்பட்ட சுமார் 300 மாணவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 8 பேர் கொவிட் 19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக பல்கலைக்கழக மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டு, கொரோனா தொற்று மாணவர்களுடன் தொடர்புடையே மேலும்  40 மாணவர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.