பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி

By T Yuwaraj

14 Feb, 2021 | 10:28 PM
image

பொத்துவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற வேன் ஒன்று முன்னால் வந்த வேளாண்மை இயந்திரத்தை ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் வேன் சாரதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

இன்று (14) தாண்டியடி பிரதேச வளைவில் பி.ப.3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச சாரதி பயிற்சி நிலைய வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த 1990 சுவசரிய அவசர சேவை, பொத்துவில் பொலிசார் மற்றும் பொது மக்கள் இணைந்து வேனில் அகப்பட்ட சடலத்தை மீட்டு  மேலதிக நடவடிக்கைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டு தற்போது உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right