(எம்.மனோசித்ரா)

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் இதுவரையில் நாட்டை முடக்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டின் 4 பிரதேசங்களில் புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராணுவத்தளபதி இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உருமாறிய புதிய வகை வைரஸ் நாட்டின் சில பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது. சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும்.

இந்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் வெளியிடப்படுகின்றன. நாடு முடக்கப்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது வரையில் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும் எதிர்வரும் தினங்களில் எடுக்கப்பட வேண்டிய பொறுத்தமான நடவடிக்கை சுகாதார தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கடும் என்றார்.