'அசுரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கர்ணன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கர்ணன்'. இந்தப் படத்தில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜீஷா விஜயன் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் மூத்த நடிகர் லால், நட்டி என்கிற நட்ராஜ், யோகி பாபு, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். 'அசுரன்' படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

தாமிரபரணி தேயிலை தோட்ட தொழிலாளர் வழக்கு பற்றிய உண்மை சம்பவங்களின் பின்னணியில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் 9ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.