புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ்-2021 கலை கலாசாரப் போட்டி தொடரின் 2ஆவது போட்டியாக நகைச்சுவை துணுக்குகள் எழுதும் போட்டி நடை பெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் வருமாறு,

1) உங்களுக்கு விருப்பமான விடயதானங்களில் நகைச்சுவை துணுக்குகளை எழுதி அனுப்பலாம்.

2) ஒருவர் 10 துணுக்குகள் கொண்ட ஒருபிரதியை மட்டுமே அனுப்பவேண்டும் இந்தத் துணுக்குள் முன்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தவையாக இருக்கக்கூடாது .

3) ஒவ்வொரு துணுக்கும் 4வரிகளுக்கு குறையாமலும் 8 வரிகளுக்கு மேம்படாமலும் இருத்தல் வேண்டும்.

4) அனுப்படும் துணுக்குப் பிரதிகளில் சொந்தபெயர், புனைப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள், வங்கி கணக்கு இலக்கம் போன்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்

5) துணுக்குள் யாவும் எதிர்வரும் 22.02.2021க்குள் எமக்கு கிடைக்ககூடியதாக பதிவிடவேண்டும்

6) பதிவிடும் எமது வலைத்தளங்களின் விபரங்கள் வருமாறு; முகப்புத்தகம் வாயிலாகா https://www.facebook.computhiyaalaikalaivaddam1980@gmail.com என்ற பக்கத்தின் மூலமாகவும், puthiyaalai  என்ற வட்சப் குறுப் மூலமாகவும் மற்றும் puthiyaalaikalaivaddam1980@gmail.comஎன்ற இமெயில் முகவரியூடாகவும் அனுப்பி வைக்கமுடியும்.

7) வயதெல்லை கிடையாது

8) நடுவர்களின் முடிவே இறுதியானது.

இந்த போட்டிகளுக்கான பரிசளிப்பு 27.02.2021 இல் நடைபெறும்.

பரிசுகளுக்காக மூன்று ஆக்கங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படும் அவற்றுக்கான பரிசுகளின் விபரம் வருமாறு

முதல்பரிசு     :- 5000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்.

இரண்டாம் பரிசு :- 3000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்

மூன்றாம் பரிசு  :- 2000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்

9)மேலதிக விபரங்களுக்கு 0776274099, 072 2780276, 0766249108 -0777412604, என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.