பொலிஸ் சீருடையை அணிந்திருக்கும் இரண்டு நபர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள சோயா மீட் ‘தடயம் பட்டா’ (DADAYAM BATTA) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விளம்பரத்தை வெளியிட கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் அனுமதியை பெறாமல் பொலிஸ் சீருடையை தவறாக பயன்படுத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடந்த 2 ஆம் திகதி கொழும்பு கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.