காலியில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் சபை 2.9 மில்லியன் ரூபா நிகர வருவாயை ஈட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த வருவாயானது,  கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு கிடைத்ததை விட அதிகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் கடைசியாக இடம்பெற்ற  இந்தியா அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது 2 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாவும், பாகிஸ்தனுடனான டெஸ்ட் போட்டியின் போது 31900 ரூபாவும் வருவாயாக கிடைத்துள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.