(செ.தேன்மொழி)

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குகள் போதைப் பொருட்களடங்கிய பொதியை எறிவதற்கு முயற்சித்த சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடைமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரும் , சீதுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து பொதியிலிருந்து 8 கிராம் ஹெரோயின் , 8 புகையிலைகள், புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் 4 லைட்டர்கள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.