தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கழைப்படும் தயாநிதி சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

5 இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என தெரிவித்து, அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பாலேந்திரன் சசி மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் தயா மாஸ்டருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொள்ள முன்னதாக தயா மாஸ்டர் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தயா மாஸ்டர் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.