இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 19 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி இக் காலக் கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 06 விமானங்களின் மூலமாக 656 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் சவுதி அரேபியாவின் தம்மத்திலிருந்து வருகை தந்த 76 பேரும், மாலதீவில் உள்ள ஆணிலிருந்து வருகை தந்த 58 பேரும், ஜப்பானில் நரிட்டோவிலிருந்து வருகை தந்த 52 பேரும், கத்தாரின் தோஹாவிலிருந்து வருகை தந்த 38 பேரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை இக் காலக் கட்டத்தில் 10 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 652 பயணிகள் நாட்டை விட்டு புறப்பட்டும் உள்ளனர்.

அவற்றில் கட்டாரின் தோஹாவுக்கு 144 பேரும் ஓமானின் மஸ்கட்டிற்கு 112 பேரும் புறப்பட்டவர்களுள் அடங்குவர் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.