காதலர் தினத்தை முன்னிட்டு இணையவழி மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால், இளைஞர் மற்றும் யுவதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு இணைய வழியூடான மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளன. இளைஞர் அல்லது யுவதிகளை இலக்கு வைத்து, காதலர் தினம் காரணமாக தங்களுக்கு பரிசு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்காக சிறியதொரு பணத்தொகையை வைப்பிலிடுமாறு கூறி மோசடிக்காரர்கள் குறுந்தகவல்களை அனுப்பி இத்தகைய மோசடிகளை செய்யலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.