மன்னார் - காட்டாஸ்பத்திரி கிராமப்பகுதியில் கேரள கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (10) அதிகாலை குறித்த சந்தேக நபரை மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 1.5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே குறித்த கேரள கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.