நாட்டில் இன்றையதினம் சனிக்கிழமை (13.02.2021) மேலும் 847 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இலங்கையில் 67,831 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 5841 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 639 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 384 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது