ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பிரசவ வைத்தியசாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி  11  குழந்தைகள் பலியாகின.

பாக்தாத்
நகரின் மேற்கு பகுதியில் யார்முக்  அரசு பிரசவ வைத்தியசாலையில் இன்று ஏற்பட்ட மின்கசிவால்  வளர்ச்சியடையாத குழந்தைகளை வைத்து பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பகுதியில் திடீரென்று தீ பிடித்தது.

குறித்த தீயில் சிக்கி  11 குழந்தைகள் உயிரிழந்தன. மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட 26  குழந்தைகள் உடனடியாக பாக்தாத் நகரில் உள்ள இதர அரசு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் அஹமத் அல் ருடெய்ன் தெரிவித்துள்ளார்.