(எம்.மனோசித்ரா)

இலங்கை இராணுவத்திற்கு படையினரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

ஆண் , பெண் என இருபாலாரும் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

18 - 24 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

10 ஆம் வகுப்பில் சித்தி பெற்றிருத்தல் உள்ளிட்ட அடிப்படை தகைமைகள் நியமனத்தின் போது கவனத்தில் கொள்ளப்படும். 

யாழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மேற்கு மற்றும் மத்தி ஆகிய பாதுகாப்பு படை தலைமையகங்களில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிப்பாளர் சபை, இராணுவ முகாம், பெப்பிலாயான மாவத்தை, கொஹூவலை (011-2815080/011-3137553) என்ற முகவரியில் அனைத்து ஆட்சேர்ப்புக்களுக்குமான விசாரணைகள் இடம்பெறும் என்றும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.