நான் பொலிஸாக இருந்திருந்தால் பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கிறார் மேர்வின்

13 Feb, 2021 | 08:01 PM
image

சிங்களவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பியனுப்பும் அரசாங்கம் தமிழர்களை இவ்வளவு நீண்ட பேரணி செல்வதற்கு அனுமதித்திருக்கிறது.

நான் அந்த இடத்தில் பொலீஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள்.

அப்படிப்பட்ட இடத்தில் எங்கிருந்தோ வந்து பாராளுமன்றில் நுழைந்தவர்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியாது.  

அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இவற்றுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். என்னை யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கிறேன் என ஆதங்கம் கொண்ட மேர்வின் சில்வா,  "ராஜபக்ஷக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள் என குறிப்பிட்டார்.

 சிங்களவருக்கு பிடித்த மாதிரியோ தமிழருக்கு பிடித்த மாதிரியோ முஸ்லிம்களுக்கு பிடித்த மாதிரியோ ஆட்சி நடத்த அரசாங்கம் தேவையில்லை.

கொரோனாவால் இறந்த உடல்களை எரிப்பதா? புதைப்பதா? நேராக வைப்பதா? குறுக்காக வைப்பதா? என்பது பற்றி நாங்கள் பேச தேவையில்லை.

அந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை சுகாதாரத்துறையிடம் ஒப்படையுங்கள். அவற்றை பற்றி முழுதாக அறிந்த வைத்தியர்களிடம் ஒப்படையுங்கள்.

நான் ஒரு தூய சிங்கள பௌத்தன். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். அதற்காக அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என முன்னாளர் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28
news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53