ஈராக்கில் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கரடி ஒன்று தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஓட ஓட விரட்டியுள்ளது.

வடக்குப் பகுதியில் உள்ள குர்திஸ்தானில் வீடுகளில் வளர்க்கப்பட்ட 6 சிறிய கரடிகளை மீட்ட வனத்துறையினர் அவற்றை வனப்பகுதியில் கொண்டுசென்று விடுவித்தனர்.

அப்போது அதனைக் காண, ஏராளமான உள்ளூர்வாசிகள் நின்றதால், அவர்களைக் கண்ட கரடிகள் குழப்பமும், கோபமும் அடைந்து பொதுமக்களை விரட்டியடித்தன.

இறுதியில் வனத்துறையினர் கரடியை திசை திருப்பி வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.