சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 3 கோடி பெறுமதியான வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் இன்று ஒருகொடவத்தையில் கைப்பற்றப்பட்டுள்ளன.   

குறித்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் குருநாகல் நகரில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றின் பெயரிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 27.05.2016 அன்று ஜப்பானில் இருந்து கொரின்திகோஸ் என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு இரண்டு வேன் மற்றும் ஒரு ஜீப் வண்டியுமே இவ்வாறு வாகனமாகவும் உதிரிபாகங்களாகவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.