வத்தளையில் சற்று முன்னர் தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

வத்தளை பகுதியில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தீ பொதுமக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.