அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு சட்டத்தை தலைகீழாக்கியுள்ளது: பிரதமரும் தோல்வியடைந்துள்ளார் - ரஞ்சித்

Published By: J.G.Stephan

13 Feb, 2021 | 10:14 AM
image

(எம்.மனோசித்ரா)
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலம் சட்டம் தலைகீழாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதியையும் நீதித்துறையையும் சீரழிப்பதற்கு எதிராக எதிர்தரப்பிலுள்ள சகலருடனும் இணைந்து கலந்தாலோசித்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பிரதமரால் கூறப்படுகின்ற விடயங்கள் ஏனைய தரப்பினரால் மறுக்கப்படுகின்றன. கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமராலும் , இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவினாலும் கூறப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்தினுள் காணப்படுகின்ற முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. தற்போது அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது. பிரதமரும் தோல்வியடைந்துள்ளார்.

சட்டத்தை தலைகீழாக்கி அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பதன் மூலம் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதியையும் நீதித்துறையையும் சீரழிப்பதற்கு எதிராக எதிர்தரப்பின் அனைத்து குழுக்களுடனும் இணைந்து கலந்தாலோசித்து நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளோம்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  பிரேமலாலல் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள இடமளித்து, ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அதற்கான உரிமையை வழங்காமை நியாயமற்ற செயற்பாடாகும். சபாநாயகரொருவர் இவ்வாறு பக்கசார்பாக செயற்படுவது பொறுத்தமற்றதாகும்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற போது தான் மின்சார கதிரையில் அமர்ந்துள்ளதாகக் கூறினார். எனினும் 2015 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம் அந்த நிலைமையை மாற்றியமைத்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18