அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்  மெத்தியு ஹெய்டன் மதுரையை வேட்டிச் சட்டையுடன் கலக்கி வருகிறார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரை விளம்பரப்படுத்துவதற்காக மதுரைக்கு வந்துள்ள ஹெய்டன் தமிழ் மக்களின் கலாசாரத்திற்கு முழுமையாக மாறியுள்ளார்.

 மதுரை மீனாட்சி அம்மன்  கோவிலுக்கு சென்ற ஹெய்டன் வேட்டிச் சட்டையுடன் அம்மனை தரிசித்துள்ளதோடு, அல்வா சமைத்து சாப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி அவரை வரவேற்ற நிகழ்வொன்றில், தமிழ் கலாச்சாரத்திற்குறிய ஆட்டத்தில் தமிழரையும் மிஞ்சி அசத்தியுள்ளார் ஹெய்டன்.

இந்நிலையில் தனது வேட்டிச் சட்டையுடன் டுவிட்டர் தளத்தில் வீடியோ பதிவொன்றை இட்டு, அதில் அடிக்கும் வெயிலில் வேட்டிச்சட்டையுடன் கூலாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.