ரஷ்யாவின் வடக்கு ஒசேஷியா- அலானியா குடியரசின் தலைநகரான  விளாடிகாவ்கஸ் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில்  சக்தி வாய்ந்த வெடி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்பொருள் அங்காடியின்  ஒரு மாடி கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு வாயு வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.