ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வாழைச்சேனை மீனவர்கள் மீது இயந்திரப்படகில் சென்ற குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தியதில் 3 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் ஜிபிஎஸ் கருவியை பறித்து எடுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர்கள் வழமைபோல சம்பவதினமான நேற்று ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் அங்கு இயந்திரப்படகில் வந்த குழுவினர் தங்கள் மூவரையும் தாக்கிவிட்டு படகிலிருந்து ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

குறித்த தாக்குதலில் காயமடைந்த 3 மீனவர்களையும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.