கொவிட் தொற்றுக்குள்ளான நடிகர் சூர்யா வீடு திரும்பினார்

By Vishnu

11 Feb, 2021 | 04:09 PM
image

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சென்னையில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூர்யா வீடு திரும்பியுள்ளார்.

சூர்யா தற்சயம் நன்றாகவுள்ளதாகவும், சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று அவரது சகோதரரும், நடிகருமான கார்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் கார்த்தி, "அண்ணா வீடு திரும்பியுள்ளார், அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்! சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் போதுமான நன்றி சொல்ல முடியாது! என்று பதிவிட்டுள்ளார்.

பெப்ரவரி 7 ஆம் திகதி தான் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்தாக சூர்யா, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right