இளைஞர், யுவதிகளே அவதானம்..!: 'காதலர் தினத்தால் இணையவழி மோசடிகள் அதிகரிக்கலாம்' - அஜித்ரோஹண

Published By: J.G.Stephan

11 Feb, 2021 | 12:49 PM
image

(செ.தேன்மொழி)

காதலர் தினத்தை முன்னிட்டு இணையவழி மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால் இளைஞர் மற்றும் யுவதிகள் இது தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

காதலர் தினத்தை முன்னிட்டு இணையவழியூடான மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.  இளைஞர் அல்லது யுவதிகளை இலக்கு வைத்து, காதலர் தினம் காரணமாக தங்களுக்கு பரிசு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்காக சிறியதொரு பணத்தொகையை வைப்பிலிடுமாறு கூறி மோசடிக்காரர்கள் குறுந்தகவல்களை அனுப்பி இத்தகைய மோசடிகளை செய்யலாம். இதன்போது இணையத்தினுடாக பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளும் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும். மோசடிகாரர்கள் இணையவழி கணக்குகளுக்கு அத்துமீறி நுழைந்து பணத்தை மோசடி செய்வதற்கான வாய்ப்புள்ளது.

அத்தோடு, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக நடாத்தப்படும் விருந்துபசாரங்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்போது இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் மட்டுமன்றி அதில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் எதிராகவும் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42