வனவிலங்கு புகைப்படத்திற்கான விருதைப் பெற்றார் பிரபல புகைப்படப்பிடிப்பாளரின் மகன்

Published By: Gayathri

11 Feb, 2021 | 12:51 PM
image

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களில், சிறந்த படங்களாக தேரந்தெடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் காணப்படுகின்றன.

பெரும்பாலோனோருக்கு ஸ்டீவ் இர்வின் என்பவரை தெரிந்திருக்கும், ஸ்டீவ் இர்வின் என்பவர் இயற்கை ஆர்வலராகவும், வனவிவங்கு பராமரிப்பாளராகவும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் அறிவிப்பாளராகவும் மட்டுமல்லாது முதலையுடன் துணிவாக விளையாடி உலகம் முழுவதும் அறியப்பட்பட்டவராவார்.

ஸ்டீவ் இர்வின் 1990 ஆம் ஆண்டில் எடுத்த நிழற்புகைப்படங்கள் மூலமே வெளியிலகிற்கு அறிமுகமானார்.

ஸ்டீவ் இர்வின் 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி மிகவும் தண்ணீரில் ஆபத்தான விலங்குகளை புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது திருக்கைமீன் எனப்படும் ஒருவகையான நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

தற்போது ஸ்டீவ் இர்வினின் மகனான ரொபர்ட் இர்வின் எடுத்த புகைப்படங்களும் தற்போது வனவிலங்கு புகைப்பட விருதை பெற்றுள்ளது.

இவர் அவுஸ்திரேலியாவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயில் இருந்து ஒரு காட்சியை புகைப்படமாக எடுத்துள்ளார்.

அவரது இந்த புகைப்படம்  55,486 மக்களின் வாக்குகளைப் பெற்று வனவிலங்கு புகைப்பட விருதைப் பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் காட்டுத் தீ பரவிய காட்டின் பாதுகாப்பு பகுதிக்கும் எரிந்த காட்டின் எச்சங்களுக்கும் இடையிலான பிளவைக் வெளிப்படுத்தியதாக இருக்கின்றது.

17 வயதுடைய ரொபர்ட் இர்வின் இந்த விருதை வென்றமை “ நம்பமுடியாத அளவிற்கு சந்தோஷமாகவும், உற்சாகமாகவும்” இருப்பதாகக் கூறியுள்ளார்.

49,000 புகைப்பட சமர்ப்புக்களில் கடந்த ஆண்டு “சிறந்த வனவிலங்கு” புகைப்படங்களின் தொகுப்பு சில...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15