இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றினுடாக 918 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் 09 விமானங்களினூடாக வெளிநாடுகளிலிருந்து 423 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களில் சவுதி அரேபியாவின் தம்மத்தைச் சேர்ந்த 75 பேரும், கட்டாரின் தோஹாவைச் சேர்ந்த 45 பேரும் அடங்குவர்.

விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டும் உள்ளனர்.

இதேவேளை இந்த காலகட்டத்தில் 11 விமானங்களினூடாக 495 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டும் உள்ளனர்.