நியூ­ஸி­லாந்தின் வோக்னர் 160 கி.மீ. வேகத்தில் பந்து வீசி­யது தொடர்­பாக சர்ச்சை எழுந்­துள்­ளது.

இலங்கை - நியூ­ஸி­லாந்து அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­வரும் முத­லா­வது டெஸ்ட் போட்­டியின் முதல் இன்­னிங்ஸில் இடது கை வேகப்­பந்­து­வீச்­சா­ள­ரான வோக்னர் பந்­து­வீ­சினார். இவர் வீசிய 14ஆவது ஓவரின் 4ஆவது பந்தை இலங்கை அணி வீரர் சந்­திமால் எதிர்­கொண்டார். அப்­போது வோக்னர் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பந்­து­வீ­சி­ய­தாக பதி­வா­னது. பொது­வாக இவர் மணிக்கு 133 கி.மீ. வேகத்­தில்தான் பந்­து­வீ­சுவார். இதை­ய­டுத்து வேகத்தை கணிக்கும் 'ஸ்பீட் கன்' கரு­வியில் 160 கி.மீ. என எப்­படி பதி­வா­னது என்று குழப்பம் ஏற்­பட்­டது.

வோக்னர் பந்­து­வீ­சி­ய­போது ஒரு பறவை பறந்து சென்­றுள்­ளது. இப்­ப­ற­வையின் வேகத்­தைத்தான் கருவி கணித்­துள்­ளது என சிலர் தெரி­வித்­துள்­ளனர்.

ஒரு­வேளை வோக்­னரின் வேகம் உண்­மை­யாக இருந்தால் சர்­வ­தேச கிரிக்­கெட்டில் 160 கி.மீ. அல்­லது அதற்கு மேற்­பட்ட வேகத்தில் பந்து வீசிய 8ஆவது பந்­து­வீச்­சாளர் என்ற பெரு­மையை பெறுவார்.

கடை­சி­யாக கடந்த மாதம் நியூ­ஸி­லாந்­திற்கு எதி­ரான டெஸ்டில் அவுஸ்­தி­ரே­லிய வீரர் ஸ்டார்க் 160.04 கி.மீ. வேகத்தில் பந்து வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.