இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் பெங்குலா பகுதியில் 6.2 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தோனேஷியாவின் இலங்கை திசையிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, நியூசிலாந்தில் ஏற்பட்ட நில அதிர்வையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லெயல்ட்டி தீவின் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 7.7 ரிச்டர் அளவில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது