மட்டக்களப்பு ஏறாவூர் மிச்சுநகர் பிரதேசத்தில் 6 வயது சிறுமிக்கு முகத்தில் சூடுவைத்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட சிறிய தந்தையை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தனது மனைவியின் முதல் கணவரது 6 வயது சிறுமியின் முகத்தில் கரண்டியை சூடு ஏற்றி சூடுவைத்த அடையாளங்கள் இருந்த நிலையில் 25 வயதுடைய சிறிய தந்தையாரை பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமயை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவரை நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னைலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.