(எம்.மனோசித்ரா)
கொவிட்-19 தொற்றால் உயிரிழிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது. மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் சாதகமானதொரு நடவடிக்கையாகும் என  அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம். சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.