(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்ற தீர்ப்பு முடியும் வரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

Image result for ஹிந்த யாப்பா அபேவர்த்தன virakesari

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றாென்றை முன்வைத்து குறிப்பிடுகையில்,

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கவேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவித்திருக்கின்றது. அதன் பிரகாரம் ரன்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்ந்து இருக்கின்றது. 

அதனால் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்ததுபோல், ரஞ்சன் ராமநாயக்கவையும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் நீதியற்ற தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில்,

நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமே பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாகவும் நீதிமன்றம் தீர்ப்பு நிறைவடைந்து பின்னரே அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு முன்னர் அழைத்துவர முடியாது என்றார்.