உணவுப்பொருட்கள் விலைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை நீக்க தீர்மானம்: லசந்த அழகியவன்ன

Published By: J.G.Stephan

10 Feb, 2021 | 04:38 PM
image

(நா.தனுஜா)
இறக்குமதி செய்யப்பட்ட  உருளைக்கிழங்கு, கீரி சம்பா, வெள்ளை சீனி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலைகள் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக  கூட்டுறவுசேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு விலைக்குறைப்பு செய்யப்பட்ட 27 அத்தியாவசியப்பொருட்களையும், குறித்த விலைகளில் எதிர்வரும் 3 மாதகாலத்திற்கு சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யமுடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் நுகர்வோர் அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் அந்த வர்த்தமானி அறிவித்தல்களின் செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படாத நிலையில், தற்போதும் அதில் உள்ளவாறு பொருட்களின் விலைகளைப் பேணுவது இயலாத காரியமாகும்.

அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, கீரி சம்பா, வெள்ளை சீனி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலைகள் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 27 அத்தியாவசியப் பொருட்களுக்கான  விலைகள் குறைக்கப்பட்டு நிவாரண விலைகளில் அவற்றை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களின் நலனையும் உள்நாட்டு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அதன்படி 

சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் 93 ரூபா, 

வெள்ளை அரிசி ஒரு கிலோ 93 ரூபா, 

வெள்ளை நாட்டு அரிசி ஒரு கிலோ 96 ரூபா, 

சம்பா ஒரு கிலோ 99 ரூபா ,

கீரி சம்பா ஒரு கிலோகிராம் 125 ரூபா,

கோதுமை மா ஒரு கிலோகிராம் 84 ரூபா, 

வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 99 ரூபா, 

சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபா, 

தேயிலைத்தூள் 100 கிராம் பைக்கற் 95 ரூபா, 

சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 165 ரூபா,

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 120 ரூபா, 

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 ரூபா,

உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) ஒரு கிலோகிராம் 140 ரூபா ,

கடலை ஒருகிலோகிராம் 175 ரூபா, 

உலர் மிளகாய் ஒரு கிலோகிராம் 495 ரூபா,

 டின் மீன் 425 கிராம் 220 ரூபா, 

இறக்குமதி செய்யப்பட்ட டின்மீன் 265 ரூபா, 

நெத்திலி ஒரு கிலோகிராம் 575 ரூபா, 

கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 400 ரூபா,

உப்பு ஒரு கிலோகிராம் 43 ரூபா, 

பால்மா 400 கிராம் 355 ரூபா, 

சோயா எண்ணெய் 500 மில்லி லீற்றர் 310 ரூபா, 

துணி துவைக்கும் சவர்க்காரம் 115 கிராம் 43 ரூபா, 

பார் சவர்க்காரம் 650 கிராம் 260 ரூபா,

வாசனை சவர்க்காரம் 100 கிராம் 56 ரூபா, 

பற்பசை 250 ரூபா,

முகக்கவசம் 14 ரூபா என்ற அடிப்படையில் புதிய நிவாரண விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04