(செ.தேன்மொழி)

களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு அருகிலிருந்து தடை செய்யப்பட்ட பொருட்களடங்கிய பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

களுத்துறை சிறைச்சாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் வீசப்பட்ட பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது பொதியிலிருந்து, தொலைபேசி, சிம் அட்டை, கஞ்சா போதைப்பொருள் அடங்கிய பக்கட்டு, 18 புகையிலைகள், புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் இரண்டு லைட்டர்கள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.