உப்புமாவெளியில் சூறையாடப்படும் கடற்கரையோர மணல் திட்டுக்கள் ; தடுக்குமாறு மக்கள் கோரிக்கை  

Published By: Digital Desk 4

10 Feb, 2021 | 04:45 PM
image

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட, உடுப்புக்குளம், உப்புமாவெளிப் பகுதியில் கடற்கரையோர மணல் திட்டுக்கள் தொடர்ச்சியாக அகழப்படுவதால் வெள்ளப்பெருக்கு மற்றும், கடல் நீர் கரையோரப்பகுதிகளுக்குள் உட்புகும் அபாய நிலை காணப்படுவதுடன், மணல் ஏற்றிச் செல்லப்படும் வீதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே அப்பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வுச் செயற்பாட்டை நிறுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக அப்பகுதி மக்களின் நலன் கருதி குறித்த மணல் அகழ்வுச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டுமென கடந்த 26.01.2021 அன்று இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ச்சியாக இந்த மணல் அகழ்வுச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறு தொடர்ந்தும் மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு மீண்டும் தெரியப்படுத்திய போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த மணல் அகழ்வு விவகாரத்தினை உடனடியாகத் தடுக்கும் வகையில் அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை செயற்படுத்துவதற்கான ஒழுங்குகளை உரியவர்கள் விரைந்து மேற்கொள்ளவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை அங்கு இடம்பெறும் மணல் அகழ்வுச்செயற்பாட்டால் உடுப்புக்குளம் நான்காம் கட்டை மயான வீதி பாதிக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக நேற்று 09.02.2021 அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு அங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறிப்பாக அவ்வீதியால் உழவியந்திரத்தில் மணல் ஏற்றிவந்தவர் ஊடகவியலாளருடைய அடையாள அட்டையை கேட்டு அச்சுறுத்தியுள்ளார். அதேவேளை ஊடகவியலாளரை வீடுயோ எடுத்ததுடன், ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் இலக்கமும் மணல் அகழ்பவர்களால் காணணொளி எடுக்கப்பட்டு ஊடகவியலாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08