(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமைக்கு சபையில் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சபையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம்செய்ய அனுமதி வழங்காமல் இருப்பது தொடர்பாக பிரதமரிடம் வினவினார். 

அதற்கு பிரதமர் பதிலளிக்கையில்,

அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவோம் என்றார். பின்னர் சற்று நேரத்தில் சபையில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் எழுந்து, கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தமைக்கு முஸ்லிம் சமூகம் சார்ப்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.