(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வது குறித்த கேள்வி ஒன்றினை சபையில் எழுப்பினார்.
நீரில் கொவிட் -19 வைரஸ் தொற்றாது என அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே சபையில் நேற்று தெரிவித்திருந்தார். அப்படியென்றால் இப்போதாவாது எமது முஸ்லிகளின் உடல்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமா என பிரதமர் சபைக்கு அறிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் சபையில் இருந்த பிரதமர், மரிக்கார் எம்.பியின் கேள்விக்கு, முஸ்லிம் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குவோம் என்றார்.
இதன் பின்னர் கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்த மரிக்கார் எம்.பி, விஞ்ஞான காரணிகளுக்கு அமைய கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கியமைக்காக பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM