இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) நேற்று, மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கில் திறமையான வீரர்களைத் தேடி சப்ரகமுவ மாகாணத்தை மையமாகக் கொண்ட தொடர் திட்டங்களை தொடங்கியுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி திருமதி அப்சரி திலகரத்ன தலைமையில், முதல் நாளில், மாவட்டத்தில் குறைந்த வசதிகளுடன் கூடிய மூன்று பாடசாலைகளில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டன. 

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசிய திட்டத்திற்காக உருவாக்கிய 'கமதா கிரிகேட்' திட்டத்தின் கீழ் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

கிரிக்கெட்டியில் சேர விரும்பும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவை வழங்குவது இதன் நோக்கமாகும்.

மாணவிகள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்புடன் அந்தந்த பாடசாலைகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.