மேல் மாகாணத்தில் கொரோனா அனர்த்தம் குறைவாக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாலர் பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பி.எல்.நிஷாந்த நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

தற்பொழுது மேல் மாகாணத்தில் இந்த பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பெரும் சிமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

நாம் விடேசமாக கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேல் மாகாணத்தில் கொவிட் அனர்த்தம் குறைந்த பகுதிகளில் இந்த பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.