பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த மாத இறுதியில் தனது பயணத்தின் போது இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார் என்று கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அயூப் கான் மற்றும் பிரதமர் மறைந்த சுல்பிகர் அலி பூட்டோ ஆகியோருக்குப் பிறகு இலங்கை பாராளுமன்றில் உரையாற்றும் மூன்றாவது பாகிஸ்தான் தலைவராக இம்ரான் கான் இருப்பார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ஸ்ரீ ஜவஹர்லால் நேரு 1962 இல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் வெளிநாட்டு பிரமுகர் ஆவார். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மாகரெட் தாட்சரும் இதேபோன்ற உரையை அடுத்தடுத்த சந்தர்ப்பத்தில் நிகழ்த்தினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாராளுமன்றத்தில் உரையாற்றினார் 2015.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் அவர் இந்த விஜயத்தின்போது சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.