1000 ரூபா விடயத்தில் கம்பனிக்காரர்களுடன் இணைந்து அரசாங்கம் நாடகமொன்றை அரங்கேற்றி வருகின்றது - வேலுகுமார்

Published By: Digital Desk 4

09 Feb, 2021 | 07:59 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் அரசாங்கம் கம்பனிகளுடன் இணைந்து நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகின்றது.

இதன் இறுதியில் தொழிலாளர்களுக்கு தற்போது இருப்பதும் இல்லாமல் போய்விடும் நிலைமையே ஏற்படும். அவ்வாறான நிலைக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என எம். வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழ் ஊழியர் சகாய நிதியச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சியை பாராட்டுகின்றேன்.

சம்பள நிர்ணய சபையினூடாக ஆயிரம் ரூபா என்ற இலக்கத்துக்கு அரசாங்கம் சென்றிருக்கின்றது. என்றாலும் இதன் மூலம் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்க முடியாது.

ஏனெனில் அரசாங்கம் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கின்றது. என்றாலும் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது. 

மேலும் தோட்டங்கள் அரசாங்கத்துக்கு சொந்தமானவை. அதன் நிர்வாகத்தையே கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அப்படியென்றால் அந்த கம்பனிகளை ஏன் அரசாங்கத்துக்கு கட்டுப்படுத்த முடியாது என கேட்கின்றேன். அரசாங்கத்தின் ஆயிரம் ரூபாவை வழங்குவதாக இருந்தால் மாதத்துக்கு 13நாட்களே வேலை வழங்கப்படும் என கம்பனிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் எமது இலக்காக இருப்பது, தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படையில் 25 நாட்களுக்கு 25ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பதாகும்.

அதேபோன்று ஆயிரம் ரூபா வழங்குவதுடன் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருந்துவரும் வருடத்துக்கு 300நாட்கள் வேலை மற்றும் வரப்பிரசாதங்கள் அவ்வாறே வழங்கப்படவேண்டும்.

அதன் பிரகாரமே ஆயிரம் ரூபாவை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவேண்டும். ஆனால் இந்த முறைக்கு கம்பனிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன. அப்படியானால் இந்த கம்பனி காரர்களை கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றதா அல்லது கம்பனி காரர்களுடன் இணைந்து அரசாங்கம் நாடகம் ஒன்றை நடடித்து வருகின்றதா என கேட்கின்றேன். 

மேலும் கம்பனி காரர்களின் தீர்மானத்துக்கமைய ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கி 13நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 13ஆயிரம் ரூபா சம்பளமே கிடைக்கும். இதனால் மரத்தில் இழுந்து விழுந்தவனை மாடு முட்டிய கதையாகவே தோட்டத்தொழிலாளர்களுக்கும் ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44