சட்டக்கல்லூரி இறுதி பரீட்சை விவகாரத்தில் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய தீர்வு வழங்கப்படும் - கெஹெலிய ரம்புக்வெல்ல

Published By: Digital Desk 3

09 Feb, 2021 | 04:52 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவது தொடர்பான பிரச்சினை 2013 ஆம் ஆண்டு முதல் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு மாணவர்களில் பெருமளவானோரின் கோரிக்கைக்கு அமைய தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது.

இதன் போது 2024 முதல் சட்டக்கல்லூரி தேர்வினை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் ,

இந்த தீர்மானத்தால் மனித உரிமைகள் மீறப்படுகிறது என்று கூறினால் அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவூடாக தீர்த்துக் கொள்ள முடியும். தமிழ் மற்றும் சிங்களம் என்பவை தேசிய மொழிகளாக காணப்படும் அதேவேளை ஆங்கிலம் தொடர்புபடுத்தல் மொழியாகக் காணப்படுகிறது. இந்த பிரச்சினை பல வருடங்களுக்கு முன்னரிலிருந்தே காணப்படுகிறது.

எனவே இது மாணவர் சங்கம் உள்ளிட்டவற்றால் பேசி தீர்க்கப்பட வேண்டியவையாகும். சட்ட கல்வி தொடர்பான புத்தகங்கள் ஆங்கில மொழியில் காணப்படுவதால் சிலர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். எனினும் தற்போதுள்ள மாணவர்களில் பெருமளவானோரின் கோரிக்கைக்கு அமைய இதற்கான தீர்வு எடுக்கப்படும். இதில் பக்க சார்பாகவோ சர்வாதிகாரமாகவோ தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரப்பெட்டி விழுந்து இளைஞன் மரணம்!

2024-05-29 11:27:25
news-image

பஸ் கவிழ்ந்து விபத்து ; 27...

2024-05-29 11:33:55
news-image

இலங்கையை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்ட விவகாரம்...

2024-05-29 11:03:50
news-image

இன்றைய தங்க விலைச் சுட்டெண்

2024-05-29 10:47:43
news-image

ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில்...

2024-05-29 10:50:19
news-image

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம்...

2024-05-29 10:24:11
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு...

2024-05-29 10:56:48
news-image

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின்...

2024-05-29 10:11:30
news-image

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-05-29 10:10:35
news-image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில்...

2024-05-29 10:11:29
news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19