இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் பதிவான வீதி விபத்துக்களில் சிக்கி 45 பேர் உயிரிழந்ததுடன், 266 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக வீதி விபத்துக்களில் 06 நபர்கள் உயிரிழந்திருப்பதை இந்த தகவல் வெளிப்படுத்திக் காட்டுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

காயமடைந்த 266 பேரில் 94 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், கம்பஹா, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான விபத்துக்கள் பதிவாகியும் உள்ளன.

அதேநேரம் ஜனவரி 31 முதல் பெப்ரவரி 06 ஆம் திகதி வரை நாட்டில் மொத்தம் 403 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அஜித் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார்.