மொனராகலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த  பொலிஸ் அதிகாரியொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில்  கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்த முதல் அதிகாரி இவர்தான் என  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

உயிரிழந்த  பொலிஸ் அதிகாரி 59 வயதுடையவர் என அவர் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் அதிகாரி மாரடைப்பு காரணமாக பெப்ரவரி 03 ஆம் திகதி மொனராகலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட  பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளின் தந்தையாகிய பொலிஸ் அதிகாரி  ஓய்வு பெற தயாராக இருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.