அமெரிக்காவில் 29 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் அக்டமி ஒப் பீடியாட்ரிக்ஸ் (AAP) மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் பெப்ரவரி 4 ஆம் திகதி வரையான நிலவரங்களின் படி, சுமார் 117,500 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளதாக அக்டமி ஒப் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.

ஜனவரி 21 முதல் பெப்ரவரி 4 வரையிலான இரண்டு வாரங்களில், நாடு முழுவதும் 257,680 சிறுவர்களுக்கு புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இது 10 சதவீதம் அதிகரித்துள்ளது என அக்டமி ஒப் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உறுதிசெய்யப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் சிறுவர்கள் 12.9 சதவிகிதம் உள்ளனர்.

ஒட்டுமொத்த விகிதம் சனத்தொகையில் 100,000 சிறுவர்களில் 3,899 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

"இந்த நேரத்தில், கொரோனா காரணமாக கடுமையான நோய் குழந்தைகளிடையே அரிதானது என தோன்றுகிறது. இருப்பினும், தொற்றுநோயால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்து கூடுதல் தரவுகளை சேகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

வைரஸ் நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வழிகள் உட்பட பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், அத்துடன் அதன் உணர்ச்சி மற்றும் மனநல பாதிப்புகள் ”என அக்டமி ஒப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.