தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபை ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் விடா முயற்சியாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழுத்தத்தினால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள கோரிக்கைக்கு சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தொழில் ஆணையாளர், தொழிற்சங்கங்கள், கம்பனிகள் மற்றும் அரச தரப்பு பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது முதலாளிமார் சம்மேளனம் நாள் சம்பளமாக 585 ரூபாயை முன்வைத்தனர். ஆனால் தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபாவை முன்வைத்த நிலையில் அடிப்படை நாள் சம்பளமாக 900 ரூபாவும் மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை சம்பள நிர்ணய சபையால் முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக 11 பேர் வாக்களித்தனர். தொழிற்சங்க தரப்பிலிருந்து 8 பேரும், அரச தரப்பில் இருந்து 3 பேரும் வாக்களித்தனர். இதன்படி இத்திட்டம் நிறைவேறியது.
மிக நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றே தீருவேன் என்று விடா முயற்சியுடன் போராடிய எனது பாசத் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானை இவ்வேளையில் நினைவு கூருகிறேன்.
அவருடைய விடா முயற்சியின் பலன்தான் இன்று எமக்கு கிடைத்துள்ளது. அவரின் ஒவ்வொரு அணுகுமுறையும் வெற்றியின் படிகள்தான்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள போராட்டம் முழு வெற்றியளிக்க ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக எமது பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து எமது நன்றிகளைத் தெரிவித்தோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM