இரத்த நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் இந்தோனேஷிய மக்கள் அதிர்ச்சியில்

Published By: Digital Desk 4

09 Feb, 2021 | 05:48 AM
image

இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடத்தில் மழை பெய்து இரத்த நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தவிக்கும் கிராமம் - காரணம் என்ன?

குறித்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் நேற்று இரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வெள்ளத்தை தொலைபேசிகளில் படம் பிடித்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டனர்.

ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தவிக்கும் கிராமம் - காரணம் என்ன?

இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில் பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகளில் இருந்த சாயம் மழைநீரில் கலந்ததால் தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது எனக் கண்டறிந்துள்ளனர்.

ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தவிக்கும் கிராமம் - காரணம் என்ன?

இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய தொழிற்சாலைகளால் நிறம் மாறி இருக்கின்றன.

இந்த முறையும் அதேபோன்ற வெள்ளம் இந்த கிராமங்களை சூழ்ந்து இருக்கிறது. அடுத்து மழை பெய்யும் போது நிறம் மாறிவிடும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Image result for People in Indonesia shocked by the flood of blood red

இந்தோனேஷியாவில் அடிக்கடி மழை பெய்துவதும் இயல்பான ஒன்று. சமீபத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 43 பேர் உயிரிழந்தனர்.

அதுபோல் இப்போதும் நடந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் சாயம் கலந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right